×

கொரோனா வைரசால் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விவரமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதுகுறித்து மவுனம் காத்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2,700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. பேரல் 35 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் நாட்டில் பெட்ரோல் விலையானது தொடர்ந்து ரூ.70ஆக நீடித்து வருகின்றது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2004ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 35அமெரிக்க டாலராக குறைந்தபோது நாட்டில் பெட்ரோல் விலையானது ரூ.37.84ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல் விலையானது ரூ.70ஆக நீடித்து வருகின்றது.

கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார கொரோனாவானது நாட்டின் வளர்ச்சியை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. கொரோனாவை கையாளுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவது மற்றும் முக்கிய நடவடிக்கைகள் எடுப்பது என அனைத்திலும் அரசு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற ஒரு தொற்றுநோயை சாதாரண முறையில் கையாள முடியும் என்பதில் உடன்பாடு இல்லை. மத்திய சுகாதார துறை அமைச்சர் ஒரு மருத்துவர் என்பது வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும். பிரதமரும் முழு அரசியல் அறிவியலுக்குமான மருத்துவர் போன்று நடந்து கொள்கிறார். இதுபோன்றவை கொரோனா பாதிப்பை தடுக்காது என்பதையாவது இருவரும் அறிந்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags : Parliament , economic ,impact, Parliament,Congress insists
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...