×

புழல் காவாங்கரை அருகே லாரி டிரைவரை தாக்கி வழிப்பறி: 2 பேர் கைது; கார் பறிமுதல்

புழல்: செங்குன்றம் அருகே லாரியை வழிமறித்து டிரைவரை அடித்து உதைத்து பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (24). இவர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு உத்திரப்பிரதேசம் நோக்கி சென்றார். சென்னை செங்குன்றம் அருகே காவாங்கரை தண்டல்கழனி அருகே சென்றபோது காரில் வந்த செங்குன்றத்தை அடுத்த பாலகணேசன் நகரை சேர்ந்த ராஜேஷ் (26), செங்குன்றம் அடுத்த கோணிமேடு ஐஸ்வர்யா நகரை சேர்ந்த கார்த்திக் (20) ஆகிய 2 பேர் லாரியை மறித்து டிரைவர் முகேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ14 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூர் கூட்டு சாலையில் செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த காரை மடக்கி விசாரித்தபோது லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களது கார் மற்றும் ரூ14 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

புழல்: செங்குன்றம் தீர்த்தங்கரைபட்டு, சேரன் தெருவை சேர்ந்தவர் மல்லிகா (49). கடந்த 9ம் தேதி சோத்துப்பாக்கம்-பாலவாயல் சாலையில் மல்லிகா நடந்து சென்றபோது அவர் அணிந்திருந்த 6 சவரன் செயினை 2 மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சென்னை வியாசர்பாடி, பாரதி நகர் 3வது தெருவை சேர்ந்த அருண்ராஜ் (19) மற்றும் சாஸ்திரி நகர் 2வது தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிந்தது. எனவே இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் புழல் விநாயகபுரம், ஏஜிஆர் நகரை சேர்ந்த ராமலட்சுமி (35) கடந்த ஜனவரி 31ம் தேதி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்தபோது அவரது 5 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்த சீனு (19), அங்கம்மா ராவ் (30) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,lorry attack Car confiscation , Bullish, wayward, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...