×

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: டிடிவி.தினகரன் தகவல்

சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமமுக புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடந்தது. டிடிவி.தினகரன் கட்சி கொடியேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அமமுகவிற்கு சின்னத்தை மிக விரைவில் தேர்தல் ஆணையம் வழங்கும். மேலும், சசிகலா மிக விரைவில் சிறையில் இருந்து வெளியே வர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அவர் வெளியில் வந்த பிறகு உங்களுடைய கேள்விக்கு பதில் அளிப்பார். அவர் வெளியே வந்தபிறகு எங்களுடன் தான் இருப்பார். நான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன். ஒன்று ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன். மற்றொன்று எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக தென்பகுதியில் போட்டியிடுவேன். இவ்வாறு கூறினார்.

Tags : DDV Dinakaran Assembly Elections in Alliance for Coalition , Assembly Election, Alliance, DTVDinakaran
× RELATED சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: டிடிவி.தினகரன் தகவல்