×

கொரோனா பரவாமல் தடுக்க மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது

கோவை: கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் தற்காப்பு மற்றும் ஆரம்ப நிலை கண்டறிதல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலும் கொரானா நோய் பரவாமல் இருப்பதற்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. பேரணியை, அரசு மருத்துமனை டீன் அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் பழனியம்மாள் தலைமையில் சிறுநீரகத்தை காப்போம், சிறுநீரக நோயை முன்கூட்டிேய கண்டறிவோம் உள்ளிட்ட சிறுநீரக நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையடுத்து கொேரானா நோய் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க அதன் வழிமுறைகள் அடங்கிய விவரம் குறித்த துண்டு சீட்டுகளை மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மருத்துவமனை டீன் அசோகன் வழிக்காட்டுதலின்படி கொேரானா பரவாமல் இருப்பதற்காக கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் கைகளை கழுவி காட்டினார்கள். அதன்பின், ‘தாய்மையை போற்றுவோம்’ என்னும் தலைப்பில் குழந்தைகள் வார்டில் உள்ள தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹார்லிக்ஸ், சோப்பு, துணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


Tags : Coimbatore Government Hospital Coronavirus to Prevent Student and Student Awareness , Corona, Students Awareness, Coimbatore Government Hospital
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...