×

ஜீப்ரானிக்ஸ் ஹோம் ஆட்டோமேஷன் கேமராவுடன் உங்களது வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

வைஃபை, பான், சுழற்வசதி, டிஜிட்டல் ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலி இணைக்கப்பட்ட நுண்ணுனர் கேமரா.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுகள், ஒலியமைப்பு தீர்வுகள், மொபைல்/லைஃப் ஸ்டைல் உதிரிப் பாகங்கள்  மற்றும் கண்காணிப்புக் சாதனங்கள் போன்ற தயாரிப்புகளில் இந்தியாவிலேயே முதன்மை நிறுவனமான Zebronics, புதிய வைஃபை, பான், சுழற்வசதி, டிஜிட்டல் ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, ஹோம் ஆட்டோமேஷன் ஸ்மார்ட் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.    
 
தற்காலத்தில், ஹோம் ஆட்டோமேஷன் கேமரா, ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது, அதுவும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பிற்கு. நீங்கள் அலுவலகத்தில் அல்லது ஏதேனும் விடுமுறையில் எங்கே  இருந்தாலும், உங்களது வீட்டில் நடப்பவற்றை உங்களால் உடனடியாகக் கண்காணிக்க இயலும். உங்களது போனில் அறிவிப்புகளைப் பெறலாம் , மேலும் உங்களது வீட்டில் உள்ள நபர்களுடன், கேமரா வழியாகத் தொடர்புக்கொள்ளவும் இயலும் என்பதால், நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருந்தாலும், உங்களது மனம் நிம்மதியுறும்.

ப்ளே ஸ்டோரில் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் MIPC செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இந்தச் செயலி உங்களது ஹோம் ஆட்டோமேஷன் கேமராவை எளிதாகப் பொருத்திக், கட்டமைக்க உதவும். மேலும் கேமரா கோணங்களை மாற்றுதல், அலாரம் அமைப்பை இயக்குதல், நகர்வைப்  பதிவு செய்தல் மேலும் புதிய வசதிகளுடன் இந்தச் செயலி கிடைக்கிறது.   

இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமராவின் மூலம், உங்களது சுற்றுபுறம், வீடு மற்றும் வில்லாக்களை எளிதாக கண்காணிக்க இயலும் என்பதுடன், அதன் 2 மெகா பிக்ஸல் வசதி, இதில் பதிவாகும் அனைத்து வீடியோக்களிலும், ஒவ்வொரு அசைவும்  தெளிவாக இருக்கும். இந்தக் கேமராவில், மோஷன் டிடக்சன் என்னும் தனித்துவமான சிறப்பு அம்சம் உள்ளது. இதன்படி கேமரா ஏதேனும் ஒரு அசைவை உணருமானால், உடனடியாக அலாரம் எழுப்பி, உங்களது மொபைலுக்கு ஒரு செய்தியை அனுப்பும். இதனால நீங்கள் உடனடியாக உங்களது வீட்டை கண்காணிக்க/பரிசோதிக்க இயலும்.  

இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமரா,குழந்தையைக் கண்காணிக்கும் காமராவைப் போல இரு மடங்கு எனச் சொல்லலாம். 350 டிகிரிக்கு சுழன்று பான் செய்யும்  அம்சத்தையும், , 100 டிகிரிக்கு திரும்பும் வசதி & ஒரு பொருளின் மீது உங்களது மொபைலில் உள்ள செயலி மூலம் டிஜிட்டல் ஜூம் செய்யும் வசதியும் கொண்டது.. இதனால், உங்களால், உங்களது இடத்தின் முழுப் பரிமாணத்தையும் பார்க்க இயலும். மேலும், H.264  வீடியோவின் அளவைக் குறைக்கும் கேமரா ஸ்மார்ட் H.264  அம்சத்தைக் கொண்டதால், வீடியோ பதிவின் போது சேமிப்பிடத்தை சேமிக்க இயலும்.

350 டிகிரி சுழலும் வசதி மட்டும் இல்லாமல், உங்களது விருப்பமானவர்களுடன் நேரடியாகத் தொடர்புக் கொள்ளும் இருவழித் தொடர்பு வசதியும் இதில் உள்ளது. நீங்கள் உங்களது வீட்டில் உள்ள முதியவர்களையோகுழந்தைகளையோ கண்காணிக்கிறீர்கள் எனில், இந்தக் கேமராவில், உட்பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக் உதவியுடன், கண்காணிப்பு மட்டுமின்றி அவர்களைத் தொடர்புக் கொள்ளவும் இயலும்.

ஒருவேளை உங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்புத் தேவை என்று கருதினால் கவலை கொள்ள வேண்டாம் , இந்தக் கேமராவில் உள்ள 10 மீட்டர் அளவுக்கான, இன்ஃப்ரா ரெட்/அகச்சிவப்பு கதிர்களின் வரம்புக்கு உட்பட்டு, இரவு நேரக் கண்காணிப்பு அமைப்பைக் கொண்டு, ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க இயலும்.   
இந்த புதிய வரவைப் பற்றி நிறுவனத்தின் இயக்குனர் திரு. சந்தீப் தோஷி அவர்கள் பேசும்போது, “உங்களது சுற்றுப்புறத்தினை கண்காணிப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிவிட்டது. ஆனால், இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமராவின் மூலம் உங்களது வீட்டுக்குள் நடப்பதும், உங்களது போனை தொடுவதன் மூலம் உங்களின் விரலசைவுக்கு வந்து விடுகிறது. இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமரா நமது பயணத்தின் ஆரம்பம் என்றே உணர்கிறேன். மேலும் இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமராப் பிரிவுகளில்  இன்னும் பலவும் வரவேண்டியுள்ளது என்று கருதுகிறேன்.”

இந்தக் கேமரா LAN/WIFI/Hotspot இணைய இணைப்பு வசதி மற்றும் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள்/தரவுகளை , 512GB சேமிப்பு வசதி வரை சேமிக்கும்படியாக மைக்ரோ SD கார்டு சப்போர்ட் செய்யும் வசதியும் கொண்டது. இந்தக் கேமராவை சுவரில் பொருத்தலாம் அல்லது மேசைமீது வைத்தும் உபயோகப்படுத்தலாம்.


Tags : home ,Zebronics , Zebronics on Friday launched a new home automation smart camera that comes with WiFi, pan
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு