×

சவூதியில் அராம்கோ நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மேலும் சரிய வாய்ப்பு

டெல்லி: கச்சா எண்ணைய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை நேற்று குறைந்தது. கச்சா எண்ணைய் உற்பத்தி நாள்தோறும் ஒரு கோடி 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் பேரல்களாக உயர்த்த சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அராம்கோ தலைவர் அமீன் நாசர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நியூ யார்க் மெர்கண்டைல் எக்சேஞ்சில் அமெரிக்க கச்சா எண்ணையின் விலை 32 புள்ளி 98 டாலராக குறைந்தது.

தற்போது உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக நாடுகளிடையேயான வணிகத் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து முடிவெடுக்க, மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளில், ஒபேக் கூட்டமைப்பு நாடுகளும், கூட்டமைப்பில் இல்லாத கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளும் வியன்னாவில் கூடினார்கள். மார்ச் 6-ம் தேதி, ஒபேக் - ஒபேக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளின் கலந்தாய்வில்தான், சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் முட்டிக்கொண்டன.

விலை வேகமாக சரிவதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என விடப்பட்ட கோரிக்கையை ஏற்க ரஷ்யா தலைமையிலான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு மறுத்து விட்டதை அடுத்து சவூதி தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டு விலை மேலும் சரியும் என கூறப்படுகிறது.


Tags : announcement ,Aramco ,Saudi , Saudi, crude oil, price, reduction
× RELATED சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு