×

கேரளாவுக்கு அடுத்தபடியாக வூகானை போன்று மாறிய தலைநகரம் : டெல்லியில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்வுகள் நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் குடியேறிவிட்டது.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் உள்ள பல நகரங்களில் தலை தூக்கியுள்ளதால், மாணவர்கள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kejriwal ,schools ,New Delhi ,theaters ,colleges ,closure ,Delhi , School, Colleges, Movie Theaters, Delhi
× RELATED டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோட் ஷோ