×

என்னடா இது புது சோதனை!....பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள்: கொரோனா எதிரொலியால் மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: விளையாட்டு போட்டிகளின்போது மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உள்ளிட்டவைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத விளையாட்டு போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ள அமைச்சகம், கொரோனா தடுப்பு குறித்த சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பார்வையாளர்கள் இன்றி ஐ.பி.எல். போட்டிகளை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா -  தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில் தான் வருகை தருவார்கள்.

இதனால் ஏப்ரல் 15ம் தேதி வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்தவொரு விளையாட்டு நிகழ்விலும் பொதுக்கூட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளை கடைபிடிக்கவும், எந்தவொரு விளையாட்டு நிகழ்விலும் பொதுக்கூட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்கும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம்.

Tags : matches ,IPL ,spectators ,government ,Competitions ,Corona ,Central ,Corona Echo , Spectators, IPL tournaments, corona, central government
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி