×

கொரோனா குறித்து யாருக்கும் அச்சம் வேண்டாம்.. தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள்... : முதல்வர் பழனிசாமி

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ஏசியில் இருப்பவர்களுக்கு கொரானா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு மாஸ் வழங்கி காப்பாற்றுங்கள்.நாங்கள் எல்லாம் புள்ள குட்டிகாரர்கள், உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடை தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம், எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, இந்தியாவில் திறமைவாய்ந்த மருத்துவர்கள் இருப்பதாக கூறினார். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனே மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே சட்டசபைக்குள் கொரானா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய சபாநாயகர், மாஸ்க் பயன்படுத்த தேவை ஏற்படும் போது வழங்கப்படும் என்றார்.

திமுக, அதிமுக தீர்மானத்தின் மீது பேச்சு...

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தன்பால் தலைமையில் நேற்று தொடங்கியது. 2ம் நாளான இன்று கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிமுக, திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.அதிமுகவின் பரமசிவம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஏற்கனவே திமுக தொடங்கிவிட்டதாக தீர்மானத்தின் போது திமுக உறுப்பினர் திருப்பரங்குன்றம் சரவணன் பேசினார். மேலும் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் மக்களை அச்சுறுத்தவதாகவும் அமைச்சர்கள் கூட கைகுலுக்காமல் வாழ்க வளமுடன் என கூறி  செல்வதாகவும் கூறினார்.


Tags : doctors ,Corona , Corona, Virus, Harshavardhan, Minister of Health, India
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...