×

மக்களிடம் குறை எதுவும் இல்லை: நடிகர் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்...பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சேலம்: மக்களிடம் ஏற்கனவே எழுச்சி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா  மண்டபத்தில் நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் சென்னை லீலா பேலஸ்  ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, அரசியலுக்கு வர உள்ளதை அறிவித்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினேன்.சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது  மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும். 2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள்  நிகழ்த்திக் காட்ட வேண்டும்.தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மாற்றத்திற்கான  எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன் என்றார்.

ரஜினி பேச்சு குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்,  நடிகர் ரஜினிகாந்த் பாஜக-வில் இணைய வேண்டும் என்று விரும்பம் தெரிவித்தார். 1977-ம் ஆண்டு முதலே மக்கள் மாற்றத்தை தேடி வருகின்றனர். 1977-ல்  எம்ஜிஆர் அவர்கள் மாற்றத்தை மக்களுக்கு கொடுத்தார்.

எனினும், மக்களுக்கு மன நிறைவு இல்லாத காரணத்தினால், 1993,1994-ல் வைகோ அவர்களை எதிர்பார்த்தார்கள். அதற்குப்பின், தேமுதிக தலைவர்  விஜயகாந்தை எதிர்பார்த்தார்கள். இதற்கு இடையே முப்பனார் அவர்களை மக்கள் எதிர்பார்த்தார்கள். அவ்வப்போது மக்கள் மாற்றத்தை  எதிர்நோக்கியுள்ளனர். எனவே மக்களிடம் குறை எதுவும் இல்லை என்றும் கூறினார்.


Tags : Rajini ,BJP ,Pon.Radhakrishnan , Actor Rajini wants to join BJP ...Interview with Pon.Radhakrishnan
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...