×

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளாவுக்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளாவுக்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான வீண் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா தொடர்பாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்


மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தன்பால் தலைமையில் நேற்று தொடங்கியது. 2ம் நாளான இன்று கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிமுக, திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.அதிமுகவின் பரமசிவம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

விஜயபாஸ்கர் பதில்

கொரோனா வைரஸ் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கம் அளித்த விஜயபாஸ்கர், கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன.ஜனவரி மாதமே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. கொரோனா தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன. சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்புங்கள்.கொரோனா பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.சென்னை விமான நிலையத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 8000 பேர் வருகின்றனர்.சென்னைக்கு வரும் அனைவரையும் பரிசோதித்து வருகிறோம்.இதுவரை 1,46,000 பேரை பரிசோதனை செய்துள்ளோம். இதுவரை 1,425 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தற்போதைக்கு இல்லை.மதுரை, ஈரோடு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.கேரளாவிற்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்கலாம்.உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை பின்பற்றுகிறோம், எனக் கூறினார்.

Tags : Kerala Vijayabaskar ,Kerala , Attention, Resolution, Vijayabaskar, Corona, Kerala
× RELATED கொரோனா சிகிச்சைக்கு தனியார்...