×

அமேசான் மழைக்காடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா: அமேசான் மழைக்காடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் முற்றிலும் நிலைகுலைந்து வறண்டுவிடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளின் படுகையின் பரப்பளவு 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. இதில் காடுகள் மட்டும் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இதில் 60 சதவீதம் பிரேசில் நாட்டிலும், எஞ்சிய பகுதிகள் கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்குவடார், பொலிவியா, கயானா, சுரிநாம் ஆகிய நாடுகளிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன. பூமியின் 10 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு இந்த அமேசான் காடுகள்தான் என தெரிவிக்கின்றன.

இத்தகைய இயற்கை அற்புதமான இந்த அமேசான் மழைக்காடுகள், பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைதல், அதீத கோடை வெயிலால் கடந்த ஆண்டு அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் பல லட்சம் ஏக்கரிலான வனங்கள் எரிந்து நாசமாயின. இந்த அழிவில் ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள், தீயில் சிக்கி உயிரிழந்தன.

இந்த இயற்கை பேரழிவுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் உலகின் மிகப்பெரிய இந்த பல்லுயிர் மழைக்காடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா.வின் காலநிலை அறிவியல் ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து மாசு மற்றும் அமிலமயாக்கலை கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய கரீபியன் பவளப்பாறைகள் 15 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Scientists ,Amazon , Amazon, scientists, shock
× RELATED கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் : விஞ்ஞானிகள் ஆய்வு