×

நத்தம்- செந்துறை சாலை ரொம்ப மோசம்: வாகனஓட்டிகள் புலம்பல்

நத்தம்: நத்தம்- செந்துறை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் நேரு நகர், செல்லம்புதூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நத்தம்- செந்துறை சாலையின் பல இடங்கள் உருக்குலைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ள நத்தம்- செந்துறை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நத்தத்தை சேர்ந்த சீமான் கூறுகையில், ‘நத்தம்- செந்துறை சாலையில். பள்ளிக்கூடம் இருப்பதால் காலையும், மாலையும் வாகனங்களில் குழந்தைகளை பள்ளி அழைத்து செல்வதும், நடந்து செல்லும் மாணவர்களும் அதிகம் உள்ளனர். நத்தம் பஸ்நிலையத்திலிருந்து அவுட்டர் வழியாக செல்லும் செந்துறை ரோடு பாப்பாபட்டி பிரிவு வரை மிகுந்த சேதமடைந்து ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. சாலை பாதுகாப்பு வாரம் நடத்தும் அரசு இதுபோன்ற சாலைகளை கண்டறிந்து அதில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சாலையின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : road ,motorists , Road
× RELATED குண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்