×

கால்வாய்களை மறித்து கட்டிய தடுப்பணைகளால் தண்ணீர் வரத்து தடை

*பல கோடி ஊழலிலும் ஈடுபட்டதாக புகார்

காரைக்குடி : வரத்து கால்வாய்களை மறித்து தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளதோடு, இதில் பல கோடி வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 445 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மண் அரிமானத்தை தடுப்பதற்கு என 100 நாள் வேலை திட்ட நிதியில் இருந்து ஒவ்வொரு கண்மாய்க்கும் மழைநீர் வரும் வரத்து கால்வாய்களில் தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு என ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல் ஒதுக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளன. சிறியஅளவில் தடுப்பனைகளை கட்டாமல் சுமார் 4 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் தடைபட்டு மற்ற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தவிர முறையாக கட்டாததால் தடுப்பனைகள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்களே தடுப்பனைகளை உடைத்துள்ளனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதியில் விவசாயிகளுக்கு பயனான திட்டத்தை செயல்படுத்தாமல் கண்மாய்க்கு வரும் தண்ணீரை மறித்துள்ளதால் பல கிராமங்களில் கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும். இந்த தடுப்பனைகள் கட்டியத்தில் பல கோடி வரை ஊழல் நடந்துள்ளது இதற்கு முறையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், கண்மாயில் மண் சேர்ந்து விடுகிறது என மண்அரிப்பை தடுப்பதாக கூறி இந்த தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளன கூறுகின்றனர். இதற்காக வரத்துகால்வாய் குறுக்கே கட்டியுள்ளனர் இடுப்பு அளவு உயரத்துக்கு கட்டியுள்ளனர். கட்டிய இடங்களில் எல்லாமல் கண்மாய்க்கு தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக குறுக்கு சுவரை கிராமமக்கள் உடைத்துள்ளனர். கண்மாய் ஒன்று என தடுப்பனைகள் கட்டியுள்ளனர். தமானதாக கட்டவில்லை பல இடங்களில் கைகளால் கூட உடைக்கும் அளவில் உள்ளது. இதற்கு ரூ 50 ஆயிரம் கூட செலவு வந்து இருக்காது.கட்டியும் பயன்இல்லை. தடுப்பனைகள் முறையாக கட்டவில்லை இதில் பல கோடி முறைகேடு நடந்ததுள்ளது. பெயர் அளவில் கட்டவில்லை. தகவல் பலகையில் எவ்வளவுக்கு கட்டியுள்ளனர் என தெளிவாக எழுதவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட நிதியை இதில் பயன்படுத்தியது தவறு. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

Tags : karaikudi , karaikudi, Water barriers ,canals
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்