×

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலைய எரிபொருள் கழிவுகள் பத்திரமாக கையாளப்படுகின்றன: மத்திய அரசு

டெல்லி: தமிழகத்தில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்களில் மீதமாகும் எரிபொருள் கழிவுகள்  உரிய வகையில் பாதுகாத்து, பத்திரமாக கையாளப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்து வகையான இயற்கை பேரிடர்களையும் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மின் உற்பத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவற்றின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் பிரதமர் அலுவலகங்களுக்கு பல கடிதங்களும் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையங்களில் மீதமாகும் எரிபொருள் கழிவுகள் பத்திரமாக கையாளப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பிரதமர் அலுவலகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது. அதில், கூடங்குளம் அணு உலையில் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகிய அலகுகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர் வரும் 2026ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்து வகையான இயற்கை பேரிடர்களையும் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் பயன்படுத்தப்பட்டு மீதமாகும் எரிபொருட்கள் பாதுகாப்பாக கையாளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kudankulam ,Kalpakkam ,Central Government , Koodankulam, Kalpakkam Nuclear, Fuel Waste, Central Govt
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு