×

பணம் கட்ட முடியாத நோயாளிகளிடம் உடல் உறுப்புகளை விற்க நிர்பந்திக்கும் மதுரை தனியார் மருத்துவமனை

மதுரை : தனியார் மருத்துவமனை சிலவற்றில் பணம் கட்ட முடியாத நோயாளிகளிடம் உடல் உறுப்புகளை   தானமாக கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை திருப்பாலையில் தேநீர் கடை நடத்தி வரும் வீரபாண்டி என்பவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாதம் ஆகியும் உடல்நிலை சரியாகதது மட்டுமின்றி வீரபாண்டி கோமா நிலைக்கு ஆளாகிவிட்டார்.

ஒரு கோடி ரூபாய் அளவுக்கு செலவாகிவிட்டதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், முடிந்தால் பணத்தை கட்டுங்கள், இல்லையெனில் அவரது உடல் உறுப்புகளை விற்று ஈடுக்கட்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போலிசீல் புகார் அளித்தார். மருத்துவக் கட்டணம் செலுத்தியது போக, மீதி தொகைக்கு தனது கணவரின் உடல் உறுப்புகளை தானமாக கேட்பதாக நித்யா புகார் தெரிவித்துள்ளார். இதற்காக மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : hospital ,Madurai , Private, hospital, patient, medical bills
× RELATED வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கொரோனா...