×

திருத்துறைப்பூண்டி அருகே நேமம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை தொட்டு செல்லும் மினிபேருந்துகள்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம் பகுதியில் சாலையில் தாழ்வாக மின் கம்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம் பகுதி சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு பொது மக்கள் வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் சென்று வருகிறது. தற்போது அதிகமாக வாகனங்களில் வைக்கோல் ஏற்றி செல்கிறது. மேலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து ஆட்டூர், எழிலூர், நேமம் இளநகர், வங்கநகர், ஓவரூர், வெள்ளக்கால் பகுதிக்கு இரண்டு மினி பேருந்துகள் அடிக்கடி சென்று வருகிறது. மின்கம்பி தாழ்வாக செல்லும் நேமம் பகுதியை கடந்து வந்த பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைகின்றனர்.

இதுகுறித்து நேமம் கிராம கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், நேமம் பகுதியில் உள்ள சாலையில் மின் கம்பி தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். கனரக வாகனங்கள் போகும்போது என்ன நடக்குமோ எனற அச்சம் உள்ளது. தாழ்வாக செல்லும் மின் கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்த வழியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பெரும் விபத்து நிகழும் முன்னதாக பொது மக்கள் நலன் கருதி தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Neyam ,Tirupurupoondi ,area , EB Cable
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது