×

கடந்த 2017-ம் ஆண்டு பிறகு 10,000 புள்ளிகளுக்கு கீழ் சென்ற தேசிய பங்குச்சந்தை... சென்செக்ஸ் 1,730 புள்ளிகள் சரிந்து 33,960-ல் புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை  குறியீட்டெண் சென்செக்ஸ் 1,730 புள்ளிகள் சரிந்து 33,960-ல் புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 527 புள்ளிகள் சரிந்து 9,930 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை 2017-ம் ஆண்டு பிறகு 10,000 புள்ளிகளுக்கு கீழ் செல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 3 நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 3,654 புள்ளிகள் சரிவடைந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலையில் 37,577 புள்ளிகளுடன் மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஆசியாவின் பிற நாடுகளில் உள்ளதுபோலவே, இந்திய பங்குச்சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட 2.5% சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை கண்டுள்ளன. இந்த வாரம் மட்டும், இந்த இரண்டு சந்தைகளும், சுமார் 6% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியைப்போல, ஒரு மோசமான சரிவை நோக்கி இந்த சந்தைகள் சென்றுகொண்டு இருக்கின்றன. கடந்த ஆறு நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சென்செக்ஸின் வீழ்ச்சி காரணமாக, இதுவரை ரூ.5 லட்சம் கோடி இழந்துள்ளதாக  முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றன.


Tags : National Stock Exchange ,Sensex , Stock, Sensex, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...