×

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றி திரிந்த யானை விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானை, பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நொகனூர் வனப்பகுதியில் 15 யானைகள் முகாமிட்டுள்ளன. அதிலிருந்து ஒற்றை யானை தனியாக பிரிந்து, தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, கெண்டிகானப்பள்ளி கிராமம் அருகே ஒற்றை யானை சாலையில் சுற்றித்திரிவதாக, தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து ஒற்றை யானையை நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Tags : Elephant ,road ,Thenkanikottai , Elephant
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...