×

தாளவாடி மலைப்பகுதி கல்குவாரியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? ஆளில்லா விமானம் மூலம் தேடும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? என ஆளில்லா விமானம் மூலம் தேடும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

வனத்துறையினரும் சிறுத்தை நடமாடும் விவசாய தோட்டங்களில் கூண்டு வைத்தாலும் கூண்டில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று தாளவாடி வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் தாளவாடி அருகே உள்ள சூசையபுரம் பகுதியில் செயல்படாமல் உள்ள கல்குவாரிகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா? என ஆளில்லா விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். கால்நடைகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்ஒருபகுதியாக  ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தேடுதல் பணி நடந்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Thalavadi ,Calvary ,Forest officers ,Kalquari , Thalavadi ,mountain range,mountain range,leopard , Forest officers
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை