×

விமான நிலையத்தில் பரபரப்பு: போலி வைரகற்கள் தங்கக்கட்டிகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை: இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த சாப்டீன் (66) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கை சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அவரது ஆடைகளை கலைந்து சோதனை நடத்தினர். அவருடைய உள்ளாடை மற்றும் இடுப்பைச் சுற்று சிறு சிறு பைகளை கட்டிவைத்திருந்தார். அதை வெளியில் எடுத்து பிரித்துப் பார்த்தனர். அதில் கலர் கலராக மோதிரங்கள், செயின்கள், போலி வைரக்கற்கள் ஏராளமாக மின்னிக் கொண்டிருந்தன. அதன் எடை 3 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 31.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அவரை கைதுசெய்து போலி வைரகற்களை பறிமுதல் செய்தனர். இதை எதற்காக எடுத்து வருகிறார். யாரிடமாவது இதை உண்மையான வைரக் கற்கள் என்று கூறி ஏமாற்ற்ரி விற்பதற்கா என கேட்டபோது அவர் இலங்கையில் ஒருவர் இது சாதாரண கண்ணாடி கற்கள் தான் இதை எடுத்துச் செல்லுங்கள் சென்னை விமான நிலையத்தில் உங்களை பிடிக்கமாட்டார்கள்.

இதை நீங்கள் எடுத்துச் சென்றால் அதை ஒருவர் வாங்கிக் கொண்டு ₹ 5,000 சன்மானம் தருவார் என்றதால் பணத்திற்கு ஆசைப்பட்டு வாங்கிவந்தேன் என்றார். இதே விமானத்தில் திருச்சியை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம்பெண் சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கை சென்றுவிட்டு சென்னை வந்திருந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவருடைய கைப்பை, உள் ஆடைகளில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் எடை 1.5 கிலோ. அதன் மதிப்பு ₹ 67.5 லட்சம்.  
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த ஷேக் அப்துல்லா (54) என்பவர் உள் ஆடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தார். அதன் எடை 400 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ₹16.5 லட்சம்  சுங்க அதிகாரிகள் போலி வைரக் கற்கள், தங்க கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பெண் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Tags : airport , Airport, seizure of gold bars, woman arrested
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்