×

தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு 400 குறைந்தது

சென்னை: தங்கம் விலையில் நேற்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு 400 குறைந்து ஒரு சவரன் 33,312க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  தங்கம் விலை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில் கிராம் 4,000ஐ தாண்டியது. படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த 6ம் தேதி 33,760க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது.  அதன் பிறகு 7ம் தேதி ஒரு சவரன் 33,656, 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 9ம் தேதி ஒரு சவரன் 33,488க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு 33 அதிகரித்து ஒரு கிராம் 4,214க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் 33,712க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் 4164க்கும், சவரனுக்கு 400 குறைந்து சவரன் 33,312க்கும் விற்றது. இது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ‘‘உலக பொருளாதாரம் மந்த நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது’’ என்றார்.

Tags : change , Gold, Price Reduction
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு