×

ரஞ்சி கோப்பை பைனல் சவுராஷ்டிரா 425 ரன் குவிப்பு: பெங்கால் 134/3

ராஜ்கோட்: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்திருந்தது. தேசாய் 38, அவி பரோட், விஷ்வராஜ் ஜடேஜா தலா 54 ரன், வாசவதா 106, புஜாரா 66 ரன் விளாசினர். சிராக் ஜனி, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 13 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிராக் 14 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 20 ரன் எடுத்து ஷாபாஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து (171.5 ஓவர்) ஆல் அவுட்டானது. தர்மேந்திரசிங் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ்தீப் 4, ஷாபாஸ் அகமது 3, முகேஷ் குமார் 2, இஷான் போரெல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்துள்ளது (65 ஓவர்). குமார் கராமி 26, கேப்டன் ஈஸ்வரன் 9, மனோஜ் திவாரி 35 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சுதிப் சாட்டர்ஜி 47 ரன், விருத்திமான் சாஹா 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, பெங்கால் அணி இன்னும் 291 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளுமே முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Tags : Saurashtra 425 Runs ,Ranji Trophy , Ranji Cup, Saurashtra, Bengal
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!