×

எஸ்.ஐ மகள் திருமண நிகழ்ச்சியில் திருடிய கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள்

பூந்தமல்லி: அண்ணா நகர் மேற்கு, பாடி புது நகரை சேர்ந்தவர் தங்கசுவாமி (57). இவர், கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் மணமகள் அறையில் இருந்த கதவை திறந்து உள்ளே சென்று 40 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இரண்டு மாதங்களாகியும் கொள்ளையர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது கொள்ளையர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அவர்களின் உருவங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : wedding show ,robbers ,CCTV ,SI , SI Daughter's Wedding, Robbery, CCTV Scenes
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...