×

கல்லூரி மாணவர்கள் தகராறில் மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

பெரம்பூர்: ஓட்டேரியில் கல்லூரி மாணவர்கள்  கற்களை எறிந்து  பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதுசம்மந்தமாக சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து பெரம்பூர் நோக்கி நேற்று மாலை மாநகர பேருந்து (தடம் எண் 29ஏ) சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் விஜயகுமார் ஓட்டிச்சென்றார். இந்நிலையில், ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் பேருந்து வந்தகொண்டிருந்தது அப்போது, பேருந்துக்குள் 5க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஏறினர். பின்னர் ஏற்கனவே பேருந்தில் இருந்த மாணவர்களிடம், “நீங்கள் எந்தக் கல்லூரி” எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கி பேருந்து பக்கவாட்டு கண்ணாடிகளை கற்களை கொண்டு தாக்கி உடைத்தனர்.

 இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுசம்மந்தமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் உள்ள இரண்டு கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவர்கள் மோதல்
மாதவரம் ரவுண்டானா அருகே ஆந்திரா பஸ் நிலையம் வாசலில் கல்லூரி மாணவர்கள் சிலர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அப்போது மறுபுறம் இன்னொரு கல்லூரி மாணவர்கள் கும்பல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர். ஆனாலும் போலீசார் விரட்டிச் சென்று 12 பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது  அனைவரும் பச்சையப்பன் மற்றும் அம்பேத்கர் சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்  என்றும் சில தினங்களுக்கு முன்  இவர்களுக்கு  இடையே முன்விரோதம் இருந்ததாகவும் அதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது என்று தெரிந்தது. இதையடுத்து தப்பியோடிய மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் பிடிபட்ட மாணவர்களிடம் இருந்து  3  கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : bus breaks ,college students ,Police investigation ,dispute ,CCTV College ,CCTV , College students, municipal bus, glass breaking, CCTV
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...