×

என்பிஆர் சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களும் அச்சம் சட்டப்பேரவையில் காரசார விவாதம்

* எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏன் தயக்கம்- மு.க.ஸ்டாலின்
*  யாரும் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  என்.பி.ஆர்-2020 படிவத்தில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்விகள், அதில் கணக்கெடுப்பாளர்கள் கேட்கவேண்டிய ஆவணங்களின் பட்டியல் குறித்த  வழிகாட்டுதல்கள் இவை எல்லாம், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து மாநில  அரசுக்கு என்ன பதில் வந்திருக்கிறது?.2019 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எல்லாம் அந்தந்த மாநில மக்களின் விருப்பத்தை உணர்ந்து தங்களுடைய நிலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 2020 என்.பி.ஆர். படிவப்படி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று அமைச்சரவையில் தீர்மானத்தை  நிறைவேற்றி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் “எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை சட்டமன்றத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படும்” என அறிவித்திருக்கிறார். ஆகவே, ஏப்ரல் 1 முதல் என்பிஆர் பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்ஆர்சிக்கு வழி கோலும், என்பிஆர் கணக்கெடுப்பை  நடத்தமாட்டோம் என அறிவித்து அமைச்சரவையில், சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அபுபக்கர்:  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மக்களின் அச்சத்தை போக்கும் வரை அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. கணக்கெடுப்பை நிறுத்தி  வைக்க வேண்டும்.தமிமுன் அன்சாரி(மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர்): மத்திய அரசின் இந்த சட்டத்தால் எல்லா மக்களுக்கும் பாதிப்பு என்று தெலங்கானா  முதல்வரே சொல்லியிருக்கிறார். எனவே, 1948ன் தீர்மானத்தின்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: என்பிஆர் தொடங்குவதற்கான அறிவிப்பு கொடுக்கப்படவில்லை. எனவே, சிறுபான்மையின மக்கள் அச்சப்பட  தேவையில்லை என்பதை முதல்வர் சொல்லியிருக்கிறார். சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என்பதை ஆதாரப்பூர்வமாக   முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆகவே, யாரும் அச்சப்பட தேவையில்லை.

மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சில விளக்கங்களை தந்திருக்கிறார். ஏதோ திமுக கூட்டணியில் இருந்தபோது ஏற்கனவே மத்தியில் இருந்த அரசு இதை  நடைமுறைப் படுத்தியதாக சொல்லி இருக்கிறார். அதற்கு ஒரு விளக்கத்தை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். இப்போது மத்திய அரசு  வெளியிட்டிருக்கும் 2020 என்பிஆர் படிவத்தில் இருக்கும் கெடுபிடிகள் அப்போது கிடையாது. இன்னும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்று  சொன்னால், என்பிஆர் 2010 படிவத்தில் மிகத் தெளிவாக பிறந்த தேதி குறித்து எந்த ஆவணத்தையும் பார்க்கத் தேவையில்லை என்று  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2020 என்பிஆர் கணக்கெடுப்பு, என்ஆர்சி தயாரிப்பதற்காகவே எடுக்கப் படுகின்றது என்பது, படிவங்கள் மூலம்  வெளிப்படையாகவே தெரிகிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: 2010ம் ஆண்டை போல 2020ம் ஆண்டிலும் தேசியம் பற்றி தகவல் அளிக்கும் குடும்ப உறுப்பினரின் கூற்றுப்படியே பதிவு  செய்யப்படுகிறது.

மதம் குறித்து எந்த விவரமும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெறப்படவில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பு மற்றும்  பதிவேட்டை புதுப்பிக்கும் பணி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணியின் போது நடத்திட அரசு கோரியுள்ளது. தமிழ்நாட்டில்  ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை சென்சஸ் முதல் கட்ட பணி நடைபெற உள்ளது.மு.க.ஸ்டாலின்: என்பிஆரை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்ற மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.  அதுபோன்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் என்ன தவறு? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இதை நாம் புதிதாக எதையும் எடுக்கவில்லை. ஏற்கனவே, எடுத்ததை நாம் புதுப்பிக்கிறோம். அதில் மூன்று கேள்விகள்  மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்கிற அந்த உணர்வை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் வழிகாட்டுதலுக்கு பிறகு தான்  நாம் அறிவிப்பே வெளியிடுவோம். ஆகவே, அதுவரையில் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு நாம் அதை வலியுறுத்தக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்திய  அரசமைப்பு சட்டத்தை அது எப்படி கட்டுப்படுத்தும் என்பது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும். மக்களுடைய அச்சத்தை போக்குகின்ற வகையில்  விளக்கம் தான் கேட்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கக்கூடிய ஒர் அம்சம் குறித்து, ஒரு காரியம் குறித்து, ஒரு நடவடிக்கை  குறித்து நாம் இங்கே, நம்முடைய தீர்மானம் என்று ெசால்லி, அது எந்த அளவுக்கு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்மு.க.ஸ்டாலின்: சட்டம் இயற்றிவிட்டால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது  என்ற விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆகவே  மீண்டும் மீண்டும்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஒரு  சட்டத்தைப் பற்றி சில ஐயப்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். அந்த ஐயப்பாட்டின்  அடிப்படையில்  முதல்வர், நான், உள்பட இந்தச் சட்டமன்றத்தில் விளக்கம்  தெரிவித்திருக்கிறோம். எந்தப்  பாதிப்பும் எந்தப் பகுதியிலும் இல்லை.   வருவதற்கு முன்பாகவே, நாமே  பேசிக்கொண்டிருந்தால், அது சரியாக இருக்காது.  ஆகவே, யாரும் எந்தவொரு  அச்சமும்படத் தேவையில்லை. மு.க.ஸ்டாலின்: தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முன்வராத  காரணத்தினால் அதைக் கண்டித்து திமுக சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், இந்திய யூனியன்  முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags : parties ,NPR Act of Fear All , Fear ,NPR Act, parties
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...