×

‘ஒரேநாடு ஒரே ரேஷன்’ திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமா?: முதல்வர் விரைவில் பதில்

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் கடை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமா என்பதற்கு முதல்வர் விரைவில் விடை தருவார் என்று அமைச்சர்  காமராஜ் கூறினார்.  சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கடை திட்டத்தை அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளீர்கள். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா  ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறீர்கள். அதை தூத்துக்குடி மாவட்டத்தில்  தொடங்கியிருக்கிறீர்கள். மற்ற மாவட்டங்களில் எப்போது தொடங்கப்படும்.

 அமைச்சர் காமராஜ்: இந்த திட்டம் தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்கிற திட்டம். நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களில் பரீட்சார்த்தமான முறையில் தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் எப்போது அனைத்து மாவட்டங்களிலும்  செயல்படுத்தப்படும் என்ற வினாவை எழுப்பியிருக்கிறீர்கள். அந்த வினாவுக்கான விடையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தருவார்.

Tags : Oranadu Ore Ration ,Tamil Nadu ,CM , One-way ,ration exchange , TamilNadu,soon?
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...