×

கொரோனா வைரஸ் எதிரொலி வணிக வளாகங்கள், தியேட்டர்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா பரவுவதை தடுக்க வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர்கள் தூய்மையாக வேண்டும் என்று மாநகராட்சி சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மாநகராட்சி மருத்துவர்களுக்கான கொேரானா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று சென்னை  மாநகராட்சி மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், துணை ஆணையர் ஆல்பி  ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் ஜெகதீசன்,  மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஆணையர் பிரகாஷ்  மருத்துவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களிடம் இது  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ஆல்பீ ஜான் வர்கீஸ் பேசியதாவது :  வெளிநாட்டில் வந்த  1294 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வந்தவர்கள் தங்களது மருத்துவமனையில் சிசிக்சைக்கு  வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியவர்கள், திரையரங்குகள் , வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார்  நிறுவனங்களின் பிரிதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதில் எவ்வாறு பங்களிக்க வேண்டும்.  அதிக மக்கள் கூடும் இடங்கள் என்பதால் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் அங்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டது.

Tags : theaters ,Corona ,owners , Corona virus , Business , theaters , Municipal ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு