×

நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் இருக்க வேண்டும்: மீறினால் சட்டப்படி நடவடிக்கை

சென்னை : நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும். பெயர் பலகையில் மற்ற நிறுவனங்களில் பெயர் பயன்படுத்தப்பட்டால் ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற ெமாழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பெயர் வைத்தால், குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils ,companies ,board , name board , companies,violating law
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்