×

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு

சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். அப்போது, விரைவில் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகளாக ரசிகர்கள் மட்டுமின்றி, முக்கிய நபர்கள் பலர் இடம்பெறுவார்கள் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் ரஜினி தெரிவித்தார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். இதில் கட்சி தொடங்குவதற்கான தேதி மற்றும் கட்சியின் கொள்கை விளக்க கூட்டங்கள் தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளதாகவும் இதில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு  செய்தியாளர்களை ரஜினி சந்தித்து புதிய அறிவிப்பு வெளியிட உள்ளார்.

Tags : District secretaries ,Rajini ,District Secretaries Meeting ,Rajini Breaking News , District ,Secretaries Meeting, Rajini , Breaking News
× RELATED மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக...