×

கொரோனா பாதிப்பு எதிரொலி வெளிநாடு கப்பலுக்கு மார்ச் வரை அனுமதி இல்லை: சென்னை துறைமுகம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் இருந்துவரும் பயணிகள் கப்பலுக்கு மார்ச் 31ம் தேதி வரை அனுமதி இல்லை என்று சென்னை துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா ைவரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கப்பல், விமான மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உரிய பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கப்பலிலேயே தனிமை படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்கு கப்பல்கள் முழுமையான பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் வரும் 31ம் தேதி வரை பயணிகள் கப்பல்களுக்கு அனுமதி கிடையாது என்று துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை துறைமுகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து துறைமுகங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 31ம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்களுக்கு அனுமதி கிடையாது. இது எண்ணூர் துறைமுகத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Chennai ,port , Corona,ship overseas, March,Chennai port
× RELATED சென்னை துறைமுகம் பகுதியில் 3000...