×

உங்களுக்கு என்றும் திமுக ஆதரவு தரும்: இஸ்லாமியர்களிடத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ‘உங்களுக்கு என்றும் திமுக ஆதரவு தரும்’ என இஸ்லாமியர்களிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மண்ணடியில் கடந்த 27 நாட்களாக இஸ்லாமியர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியாவது: சட்ட திருத்தத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் அதிமுக கூட்டணி வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது. சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தது திமுக தான். மேலும் இதற்கு எதிராக இந்தியாவிலையே மிகப்ெபரிய பேரணியை முதலில் நடத்தியதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தான்.

தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களிடையே கையெழுத்து இயக்கத்தை திமுக முன்ெனடுத்து நடத்தியது. அவ்வாறு பெற்ற கையெழுத்தை ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளோம். கடந்த கூட்டத்தொடரில் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.இன்றும் வலியுறுத்தினோம். பாஜக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் இந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டாலும், பின்னர் இந்த சட்டத்திற்கு எதிராக அவர்களுடைய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சிஏஏ சட்டதிருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தவறான கருத்தை அதிமுக பரப்பி வருகிறது.
முதலமைச்சர் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி அவர்களிடம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற அமைச்சர்கள், உள்துறை அமைச்சரிடம் அதைக் கொடுத்தார்கள். அந்த கடிதத்தை பிரித்து பார்க்காமல் அமித்ஷா அப்படியே வைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். போராட்டத்தை ஒத்திவையுங்கள். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் என்சிஆர் கணக்கெடுப்பு நடத்துவதாக கூறுகிறார்கள். அப்படி நடத்த வந்தால் நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டாம். உங்களுக்கு என்றும் திமுக ஆதரவு தரும். இவ்வாறு அவர் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய சந்திப்பின்போது முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சேகர்பாபு எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  



Tags : DMK ,Islamists ,MK Stalin , DMK ,support ,forever, MK Stalin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...