×

லடாக்கில் சர்வதேச யோகா தின முக்கிய நிகழ்ச்சி: மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி: இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி லடாக் யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 முதல், உலகில் 177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆயுஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறிய போது, ‘‘இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் லேயில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஏறக்குறைய 20,000 பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவித்தார்.

Tags : Modi ,International Yoga Day ,Ladakh Modi ,Ladakh , Ladakh, International Yoga Day, Program, Modi
× RELATED ஜூலை 22ம் தேதி நடைபெறவுள்ள...