×

திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகரின் பைக் தீவைத்து எரிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல்ஜி. ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர். நேற்றுமுன்தினம் வீட்டு வாசலில் அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு வந்த மர்ம நபர்கள், பைக்குக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் கல்வீசி ஜன்னல் கண்ணாடியையும் நொறுக்கி விட்டு தப்பிவிட்டனர். சத்தம் கேட்டு கண்விழித்த சக்திவேல்ஜி வெளியில் ஓடி வந்து பார்த்த போது பைக் எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். அதற்குள் பைக் முழுவதும் எரிந்துவிட்டது. புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : fire ,Trichy , Trichy, Hindu Leader, Bike, Fire
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு