×

சட்டவிரோதமாக அடைத்துவைப்பு சிறையில் இருந்து விடுவிக்க கோரிய நளினி மனு தள்ளுபடி

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை, 2018 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த நாள் முதல் சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி, நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததன் அடிப்படையில் மனுதாரர் சிறையில் உள்ளார். இதில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Nalini , Prison, Release, Nalini petition, dismissed
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...