×

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் மிடில் ஆர்டருக்கு தோனி பெஸ்ட்: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கருத்து

மெல்போர்ன்:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இழந்து படுதோல்வியைச் சந்தித்தது. இதற்கு முக்கியமான காரணம் குறித்து தற்போது பல தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, ஆட்டத்தை இறுதிவரை இருந்து வெற்றிகரமாக முடிக்கும் வீரர்கள் இல்லை என்றும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பி வருவதால், தோல்வி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நாளை மறுநாள் (மார்ச் 13) முதல் ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

இதுகுறித்து, ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லஸ்டின் லங்கர் கூறுகையில், “எங்கள் அணியில் முன்பு மைக் ஹஸ்ஸி, மைக்கல் பெவன் போன்ற மாஸ்டர் கிளாஸ் வீரர்கள் மிடில் ஆர்டரில் இருந்தார்கள். மிடில் ஆர்டரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு சிறப்பான மாஸ்டர். அதேபோல், இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்றார். கடந்த சில ஆண்டுகளாகவே 4 முதல் 7 வரை உள்ள இடங்களுக்கு 13 பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பயன்படுத்தி உள்ளது. அதேபோல், ஆறாவது இடத்திற்கு மட்டும் இதுவரை 9 பேட்ஸ்மேன்களை முயன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhoni ,match ,Australian ,coach , Dhoni Best, Australian coach
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...