×

பகிரங்கமாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: டெல்லி வன்முறை குறித்து டி.ஆர்.பாலு பேச்சு

டெல்லி: பகிரங்கமாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என  டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் டெல்லி கலவரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, டெல்லி சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் பாராளுமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லி சட்டம் ஒழுங்கு பிரச்சனை இங்கிலாந்து, ஈரான், துருக்கி, இந்தோனேசியா நாடாளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். மேலும் டெல்லியில் கலவரம் நடந்தபோது போலீசுக்கு என்ன ஆனது? நாடு எங்கே செல்கிறது? என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை ஏளனம் செய்யும் அளவுக்கு டெல்லி போலீஸ் செயலற்று போய் இருந்தது. டெல்லி கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலீசார் உதவவில்லை. தொடர்ந்து, ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை டெல்லி போலீசார் விரட்டி தாக்கினர். ஜே.என்.யு. வளாகத்தில் ரவுடிகள் புகுந்து தாக்கியபோது போலீசார் கைகட்டி நின்றனர். மேலும் ஜாமியா மிலியா பல்கலையில் பிரச்சனை ஏற்பட்டதற்கு ஏ.பி.வி.பி. அமைப்பு தான் அடிப்படை காரணம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜக தலைவர் கபில் மிஷ்ரா டெல்லி போலீசுக்கு கெடு விதைத்ததை மேற்கொள்காட்டி மக்களவையில்  டி.ஆர்.பாலு பேசினார். தொடர்ந்து பேசிய  டி.ஆர்.பாலு, டெல்லி கலவரத்துக்கு பாஜக தலைவரின் வெறுப்பு பேச்சே காரணம் என தெரிவித்தார். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசுக்கு 3 நாள்கள் பாஜக நிர்வாகி கெடு விதித்தார். 3 நாளுக்கு பின் டெல்லி போலீசை பேச்சை தாங்கள் கேட்கமாட்டோம் என்று பகிரங்கமாக பேசினார். பகிரங்கமாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து டெல்லியில் 3 மசூதிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன; 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணம் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எனவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிதாக 6 கேள்விகளை சேர்த்து உள்ளது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


Tags : Baloch ,Delhi , Public, Riot, Action, Picking, Delhi Violence, DR Baloo Talk
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு