×

கர்நாடகாவுக்கு டி.கே. சிவக்குமார், டெல்லிக்கு அனில் சவுத்ரி காங்கிரஸ் தலைவர்களாக நியமனம்: மேலிடம் உத்தரவு

டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இடைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவி தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள். அவர்களது ராஜினாமாவை காங்கிரஸ் தலைமை அங்கீகரிக்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. ஆனால் மாநில தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

மாநில தலைவராக டி.கே. சிவக்குமாரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆனால் டெல்லி சட்டமன்றத் தேர்தல், தலைவர் பதவிக்கு முத்த தலைவர்கள் இடையே போட்டி, கருத்து வேறுபாடுகள் ஆகிய காரணங்களால் மாநிலத் தலைவர் நியமிக்காமல் காங்கிரஸ் மேலிடம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸின் புதிய தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய செயல் தலைவர்களாக ஈஸ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : DK ,Congress ,Karnataka ,Delhi ,Anil Chaudhury ,Anil Choudhury , Karnataka, D.K. Shivakumar, Delhi, Anil Chaudhuri Congress
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்