×

ரூ.1.20 கோடி செலவில் 15 மாநகராட்சிகளில் சுற்றுசூழல் மேலாண்மைத் திட்டம் : சுற்றுசூழல் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.சி.கருப்பணன்

சென்னை : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக ரூ.332 லட்சத்தில் திட்டம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சுற்றுசூழல் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்டார். வேலூரை தலைமையிடமாக கொண்டு பாலாற்றின் சுற்றுசூழலை பாதுகாக்க ரூ. 50 லட்சத்தில் பறக்கும் படை அமைக்கப்படும் என்றும் ரூ.1.20 கோடி செலவில் 15 மாநகராட்சிகளில் சுற்றுசூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கருப்பணன் கூறினார்.


Tags : Environmental Management Scheme ,Municipalities ,Minister of State ,Environment KC Karupanan , Environmental Management Project in 15 Municipalities at a cost of Rs.1.20 crores: Minister of State for Environment KC Karupanan
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...