×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பா? மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கபோகும் ஜப்பான்!

டோக்கியோ: கொரோனா வைரஸ் அஅச்சுறுத்தல் காரணமாக ஒன்று அல்லது 2 ஆண்டுகள், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜுலை மாதம் 24ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகளும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக, திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த உயிர்பலிகளை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்த நிலையில், வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது பற்றி ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளது. ஒருவேளை ஒத்தி வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டால், ஒன்று அல்லது 2 ஆண்டுகள், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக, முதலாம் உலகப்போரின் போது ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானால், ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முன்னதாக, கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக பார்வையாளர் இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சி நடைபெறம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Olympics ,Corona ,Japan ,downturn , Corona virus, Olympics, economic downturn, Japan, Tokyo
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...