×

NPR-யை இந்தியாவில் உள்ள 13 மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கிறது; சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தப்பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: நேற்று முன்தினம் நடந்த தமிழக சட்டப்பேரவை  கூட்டத்தொடங்கிய போது,  மறைந்த சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  நேற்று விடுமுறைக்கு பின்பாக இன்று  முதல் வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி வரை தமிழக  சட்டப்பேரவை கூட்டத்தொடரானது மானிய கோரிக்கை  விவாதங்களுக்காக நடைபெறுகிறது. இதற்கிடையே, தமிழக  சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு  இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து, கேள்வி நேரம் முடிந்ததற்கு பின்பாக என்.பி.ஆர் குறித்து  சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு  வந்தது.

தீர்மானத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் உரை  நிகழ்த்தினார். அவர் உரையில் பேசுகையில், என்.பி.ஆர்  குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. தமிழக அரசுக்கு எழுதிய  கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?. பாஜக  கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி பணி  தொடங்கும் நிலையில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்றுங்கள். எனத் தெரிவித்தார். மற்ற மாநிலங்களை  போல் தமிழகத்திலும் என்பிஆர்க்கு எதிராக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்  என்றார்.

இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.  உதயகுமார், என்பிஆரில் உள்ள புதிய கேள்விகள் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். சிறுபான்மையினரை 30 ஆண்டுகள் பாதுகாத்த அரசு, அவர்களை தொடர்ந்து பாதுகாக்கும். சிறுபான்மையினரை தொடர்ந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். என்பிஆர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான்கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரமுடியாது. மக்களை ஏமாற்றம் தவறான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற விரும்பவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து, என்பிஆர் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்படாததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். இவர்களை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்,  என்.பி.ஆரை இந்தியாவில் உள்ள 13 மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள பீகார் மாநிலமும் என்பிஆரை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றார். என்.பி.ஆர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணி தொடங்கும் நிலையில்,பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் என்றார். 


Tags : states ,MK Stalin ,NPR ,India ,session ,Legislative , Thirteen states in India are strongly opposed to the NPR; Interview with MK Stalin after he walked away from the legislative session
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்