×

நாடு முழுவதும் இலவச போக்குவரத்து!

நன்றி குங்குமம் முத்தாரம்

சுமார் 6 லட்சம் பேர் வாழக்கூடிய ஒரு தேசம் லக்ஸம்பர்க். அங்கே வசிக்கும் பெரும்பாலானவர்களிடம் கார் இருக்கிறது. அதனால் அரசுப் போக்குவரத்தை அவ்வளவாக மக்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் காரில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக  உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக லக்ஸம்பர்க் போக்கு வரத்து அமைச்சகம் ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது. ஆம்; அரசுக்குச் சொந்தமான பேருந்து, ரயிலில் பயணிப்பவர் கள் யாரும் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. நாடு முழுவதும் பொதுப் போக்கு வரத்து இலவசம்.

இப்படி ஒரு நாடு அறிவிப்பது உலகில் இதுவே முதல் முறை. இது முதல் வகுப்பு மற்றும் இரவு நேரங் களில் செயல்படும் சில பேருந்து களுக்குப் பொருந்தாது. இதனால் லக்ஸம்பர்க்கின் குடிமகன் ஒவ்வொருவரும் வருடந்தோறும் ஒரு தொகையைச் சேமிக்க முடியும். அரசுப் போக்குவரத்தை பரவலாக மக்கள் பயன்படுத்தும்போது போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்புண்டு.

Tags : country , Luxembourg is a nation of about 6 million people.
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!