×

ரயில்வே முன்பதிவிற்கான ஆன்ட்ராய்டு செயலி மென்பொருளை பாதுகாப்புடன் கையாளுவது அவசியம்: டிஇஆர்யூ வலியுறுத்தல்

தட்கல் முன்பதிவை செல்போன்  வாயிலாக முக்கிய ரயில்களுக்கு மேற் கொள்வது இயலாத காரியமாக உள்ளது. பயணிகள் ரயில் நிலைய முன் பதிவு மையங்கள் அல்லது  அங்கிகரிக்கப்பட்ட தனியார் முன்பதிவு மையங்கள் சார்ந்தே இதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக தேவை இல்லாத அல்ல கூடுதல் கட்டணம் கொண்ட பிரீமியம் வகை தட்கல் பயணச் சீட்டுகள் மட்டுமே செல்போன்  செயலிகளில் மூலம் பெற முடிகிறது. ரயில் பயணிகள் மிக அதிகம் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) நாள் ஒன்றுக்கு 7.78 லட்சம் ரயில்வே பயணச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் செல்போன் செயலிகள் மூலம் 2.79 லட்சம் பயணச் சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது.

கடந்த 2018-19 நிதியாண்டு ஐஆர்சிடிசி நிறுவனம் 2841 லட்சம் பயணச்சீட்டுகள் விற்பனையையும், 4949 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவினையும் மேற் கொண்டது. இதில் 20 சதவீத முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ ஏஜென்ட்டுகள் மூலம் நடத்தியது. பயணச்சீட்டுகள் விற்பனையில்70 சதவீதம் ஐஆர்சிடிசி நிறுவனமும் 30 சதவீதம் ரயிவேயும் மேற்கொள்கிறது. பயணக் கட்டணமாக ரூ.32 ஆயிரத்து 69 கோடி ஐஆர்சிடிசி வசூலிக்கிறது. இதன் “ரயில் கணக்ட்” செயலிதான் முன் பதிவிற்கான அதிகாரபூர்வ செயலியாக செயல்படுகிறது. இதை கடந்த 31 மார்ச் 2019 முடிய 3.15 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளார்கள். சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் இயங்கும் ஆன்ராய்டு செயலிகள் ரயில் பயணங்களுக்கான முன் பதிவை ஐஆர்சிடிசி வளைதளத்தில் புகுந்து மேற்கொண்டு வருகின்றன. இவைகள் கூகுள் பிளே ஸ்டோரில் தாராளமாய் கிடைக்கின்றன.

ஐஆர்சிடிசி நிறுவன செயலியில் முன்பதிவு செய்ய 2.55 விநாடிகள் தேவைப் படுகிறது. அதே நேரம் சட்ட விரோத செயலிகள் 1.48 விநாடிகளில் இதை முடித்து விடுகின்றன. ஐஆர்சிடிசி  முன்பதிவில் இடம்பெறும் கேப்ட்சா என அழைக்கப்படும் செயல்முறை உறுதி தோற்றம், பண பரிவர்த்தனக்கான வங்கி ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச் சொல், லாகின் எனப்படும் நுழைவு அனுமதி பேன்றவைகள் சட்ட விரோத செயலிகளில் கிடையாது. தட்கல் நேர கேப்சாக்களை சிக்கலானதாகவும், சிறிய அளவிலும் ஐஆர்சிடிசி வடிவமைத்து இருப்பதால் மறுமுயற்சிகள் தேவைப் படுகிறது.

கேப்சாக்களை குறுக்கு வழியில் கடந்து செல்லும் “ஏஎன்எம்எஸ்”, “ஜாக்கு வார்”, “மேக்”, “சைக்கிள்”, “ஐ பால்”, “ஸ்டார் வீ - 2”, “என் ஜெட்” போன்ற சட்டவிரோத செயலிகள் அதிகம் தரவிக்கம் செய்யப்படுகின்றன. இந்த செயலிகளின் மென் பொருட்கள் குறுக்கு வழியில் குறைந்த நேரத்தில் முன்பதிவு செய்யது விடுகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையில் பணி யாற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிகள் பிரபலம். ரயில்வே பதுகாப்பு படை கடும் நடவடிக்கை மேற்கொண்டு இந்த செயலிகளை தற்போது முடக்கி இருக்கிறது.

மேலும் 60 சட்ட விரோத ஏஜெண்டுகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார் பிரதான ரயில்களில் இரண்டு மூன்று நிமிடங்களில் தீர்ந்து போன தட்கல் முன்பதிவு பயணச்சீட்டுகள் இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு 6 முதல் 10 நிமிடங்கள் வரை தாராளமாக கிடைக்கிறது என சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார். சட்டவிரோத செல்போன் செயலிகள் ரயில்வே முன்பதிவில் குறுக்கிடுவது சைபர் குற்றமாகும். வங்கிகளின் செயலிகள் மட்டுமே சம்மந்தப்பட்ட வங்கி களின் பரிவர்த்தனைக்குள் நுழைய முடிகிறது. பரிவர்த்தனை மேற்கொள்ள இயலுகிறது. அதுபோல்  ரயில்வே முன்பதிவிற்கான ஆன்ராய்டு செயிலியின் மென்பொருள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்துவது அவசியம். இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : DERU , Train reservation
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்