×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள்...நளினி சார்பில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

சென்னை :முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தன்னை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நளினி தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், ஆளுநர் முடிவெடுக்காத காரணத்தால் அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.


Tags : Tamils ,Rajiv Gandhi ,Nalini , Rajiv Gandhi, 7 Tamilians, Nalini, petition, dismissed
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...