×

அனல் மின்நிலைய பணிக்கு சவடுமண் எடுத்து சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அனல் மின் நிலைய பணிக்கு சவடு மண் எடுத்து சென்ற வாகனங்களை, மீனவ மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு நிலம் கையகப்படுத்த துவங்கியது முதல் விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அனல் மின் நிலையத்திற்கு கடலில் இருந்து நீரை எடுத்து பயன்படுத்தி விட்டு, மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு 6 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அனல் மின் நிலையப்பணிக்காக லாரிகள் மூலமாக சவடு மண்களை எடுத்து கடல் பகுதியில் நேற்று கொட்டப்பட்டது. இதனை அறிந்த மோர்பண்ணை கிராம மீனவ பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுடன் 500க்கும் மேற்பட்டோர் மண் அள்ளும் வாகனங்களை சிறைபிடித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி, டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : ground ,Thermal Power Plant , Thermal Power Plant
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி