×

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெறும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெறும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கி இருக்கிறது. சுற்றுச்சுழல் துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் சட்டப்பேரவையில் இன்று தொடங்கி இருக்கிறது. இன்று காலை 10-மணிக்கு கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி நேரம் கொடுக்கப்படும். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்.

கேள்வி நேரம் முடிந்தபின் தற்போது நடந்துவரும் மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்கியது, ஆனால் மறைந்த சட்டமனற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைத்தனர். நேற்று விடுமுறைக்கு பின்பாக இன்று தொடங்கியது. இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது மானிய கோரிக்கை விவாதங்களுக்காக நடைபெறுகிறது.

தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து இருந்தாலும் எத்தகை நடவடிக்கைளை தமிழக அரசு எடுத்து இருக்கிறது, உண்மையாகவே கொரோனா தொற்று உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், மருத்துவமனையில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சட்டமனற உறுப்பினர்கள் எழுப்பிய வேண்டிய வாய்ப்பு உள்ளதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்த தீர்மானம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புவதாகவும் அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு தெரிவித்துக்கொண்டு இருந்தாலும் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில் தான் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கி இருக்கிறது.


Tags : Dravidian Advocacy Council ,session ,Corona ,Budget Session ,DMK ,Legislative Assembly , Legislative Assembly, Corona, DMK, Resolution
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...