×

விவசாய நிலங்களை குத்தகை எடுத்து சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் : அமைச்சர் தங்கமணி

சென்னை : விவசாய நிலங்களை குத்தகை எடுத்து சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.கர்நாடகத்தில் 20 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு குத்தகைக்கு எடுத்து சூரியமின் சக்தி தயாரிப்பதை பிச்சாண்டி சுட்டிக் காட்டினார். முன்னதாக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Thangamani ,Agricultural Lands , Minister, Thangamani, Power, Solar Power and Power
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர்...