×

சபாநாயகர் தனபால் அளித்த நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்க ஒருமாதம் அவகாசம் வேண்டும் : ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

சென்னை : ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம் கேட்டு 11 எம்எல்ஏக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள் என விளக்கம் கேட்கப்பட்டது.இந்நிலையில், சபாநாயகர் அளித்த நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்க ஒருமாத அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம். எல்.ஏக்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.



Tags : Dhanapal ,Tanabal ,OPS , OPS, MLAs, Notices, Speaker, Tanapal
× RELATED தஞ்சாவூரில் மொபட் திருடியவர் கைது