×

இத்தாலியின் மிலன் அருகே சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : இத்தாலியின் மிலன் அருகே சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை தாயகம் அழைத்து வர பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! ...இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!, எனத் கூறியுள்ளார்.


Tags : founder ,Milan ,Italy ,Ramadas ,government ,home ,Tamil ,Tamil Nadu , Central Government, Bamaka, Founder, Ramadas, Emphasis, Italy
× RELATED பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...