×

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக இருந்த ஹூபே மாகாணத்தில் அதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்

ஹூபே: கொரோனா வைரஸ் பரவத் தொடங்க காரணமாக இருந்த ஹூபே மாகாணத்தில் அதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 90க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால் உலகளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்து இத்தாலி, தென்கொரியா  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் அந்த நகரில் சீன அதிபர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாகவும் ஜின்பிங் குறிப்பிட்டார். முதன் முதலில் சோதனை செய்த எம்.பி., எம்.எஸ். டோரிஸ், கொரோனா வைரஸ் தொற்று உறுதி கண்டுபிடித்த பிறகு அறிவுறுத்தப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வீட்டிலேயே  தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Xi Jinping ,Chinese ,Hubei province ,Corona , Corona, Hubei, China, Jinping
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...